சஞ்சு சாம்சன், திலக் வர்மா அதிரடி....தொடரை கைப்பற்றியது இந்தியா!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த 08ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவின் கெப்ரா பகுதியில் உள்ள எஸ்.டி. ஜார்ஜ் பார்க் மைதானத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி 13ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோனஸ்பார்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா சதம் விளாசிய நிலையில் இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் ஒரூ விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.