கேஎல் ராகுல், ரோஹித் அபார ஆட்டம்- டி20 2வது தொடரில் இந்திய அணி எளிதில் வெற்றி

 
INDvNZ

நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது இதில் நேற்றுமுதல்நாள் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

indvsnz

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் ஹர்ஷல் படேல் அறிமுக வீரராக களமிறங்கினார். நியூசிலாந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த சாப்மேன் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேரில் மிச்செல் 31 ரன்களில் இறுதிக்கட்டத்தில் எந்த ஒரு நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் ஜொலிக்கததால் அந்த அணியின் ரன்ரேட் வேகம் குறைந்தது. 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும்,அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்து சிறப்பாக பந்து வீசினர்.

பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் ஆடியது.சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார்.சிறப்பாக ஆடி வந்த கே.எல் ராகுல் 65 ரன்களில் ஆட்டமிழந்தார் , சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.17.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை 2 - 0 என கைப்பற்றியுள்ளது.