இன்று இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி!

 
indvseng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டி20 போட்டியில் அசுர பலத்தில் வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. ஆகையால் இன்றைய போட்டியிலும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது ஆகையால் அந்த அணியும் வெற்றிக்கு தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.