“என்னை மன்னித்து விடுங்கள்” – ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததால் தமிழக வீராங்கனை உருக்கம்!

 

“என்னை மன்னித்து விடுங்கள்” – ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததால் தமிழக வீராங்கனை உருக்கம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். பவானி தேவி டோக்கியோ மாநகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனையாவார். இதுபோன்று பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரராய் ஒலிம்பிக் கனவோடு டோக்கியோ சென்றார்.

“என்னை மன்னித்து விடுங்கள்” – ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததால் தமிழக வீராங்கனை உருக்கம்!

ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் இவர் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இதனால் இவரது இரண்டாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது. இரண்டாவது போட்டியில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டுடன் மோதினார். ஆனால் எதிர்பாரா விதமாக 7/15 என்ற கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்தார். இதனால் வாள்வீச்சில் இந்தியாவிற்கான பதக்க கனவு கலைந்து போனது.

“என்னை மன்னித்து விடுங்கள்” – ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாததால் தமிழக வீராங்கனை உருக்கம்!

தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், ” இது எனக்கு மிகப் பெரிய நாள். உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். நான் என்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு ஊக்கமளித்த இந்தியர்கள், தமிழர்கள், பயிற்சியாளர் நிக்கோலா, மனநல பயிற்சியாளர் ஏஞ்சலோ கார்னெமொல்லா, எனக்கு தூணாக விளங்கிய தாய், ஊடகங்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா முடிவுகளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் உழைப்புடன் மீண்டும் கம்பேக் கொடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.