“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

 

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

மனித சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக திருநங்கைகள் இருக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப யுகத்தில் கூட அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை கோரமாகவே இருக்கிறது. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். இருந்தாலும் பல்வேறு நாடுகளில் அவர்களின் நலனுக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறார்கள். நிச்சயம் அது பாராட்டக் கூடியதே.

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!
“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

அந்தச் சிறப்பு திட்டங்கள் மூலம் தன்னம்பிக்கையுடன் சமூக அந்தஸ்து பெறும் முனைப்புடனும் ஏராளமான திருநங்கைகள் வெளிவருகின்றனர். அவர்களின் திறமைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது. காவல் துறையில் பணியாற்றுகிறார்கள். அரசின் உயர் பதவியில் இருக்கிறார்கள். விளையாட்டில் ஜொலிக்கிறார்கள். உடனே திருநங்கைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தங்களது திறமையை நிருபிக்கிறார்கள் என்பதற்கான உதாரணமே மேற்சொன்னவை.

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெறும் அளவிற்கு அவர்கள் முன்னேறிவிட்டார்கள். அதற்குக் காரணம் வாய்ப்பு. ஆம் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள நியூஸிலாந்தைச் சேர்ந்த திருநங்கையான லாரல் ஹப்பார்ட் என்பவர் தகுதிபெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் திருநங்கை ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறை. பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவர் 87 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் பெண்களோடு மோதுவார் என நியூஸிலாந்து ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 43 வயதான லாரல் 2013ஆம் ஆண்டு திருநங்கையாக மாறினார்.

திருநங்கைகள் பெண்களோடு மோதுவதை அனுமதித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, அவர்களுக்கென்று விதிமுறைகளை வகுத்தது. அதன்படி போட்டியில் கலந்துகொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் அவர்களின் டெஸ்டோஸ்டிரான் (ஆண்கள் ஹார்மோன்) 10 nm/litre என்ற அளவில் இருக்க வேண்டும் என்பது முதன்மையான விதி. இதுபோன்ற பல்வேறு விதிமுறைகளைத் தேர்வாகியிருக்கிறார் லாரல். ஆனாலும் பெண்கள் தரப்பில் அதிருப்தி உள்ளது. திருநங்கைகள் ஒருவர் தங்களுடன் மோதுவது அவர்கள் அசூயையாக உணர்கிறார்கள்.

திருநங்கைகளிடம் ஆண் தன்மை இருக்கலாம் என்பதால், அறமற்ற போட்டியாக இருக்கும் என அவர்கள் எண்ணுகிறார்கள். எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. தற்போது லாரலுக்கு பல்வேறு நாட்டு வீராங்கனைகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்குக் காரணம் 2019ஆம் ஆண்டு சமோவாவில் நடைபெற்ற பசிபிக் தொடரில், காமன்வெல்த் சாம்பியனான ஃபீகிகா ஸ்டோவர்ஸை தோற்கடித்து லாரல் தங்கப்பதக்கம் வென்றார். இதுதான் பளுதூக்கும் வீராங்கனைகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

“தடைகளை உடை… சரித்திரம் படை” – ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற உலகின் முதல் திருநங்கை!

எது எப்படியாகினும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னரே லாரலுக்கு எதிராக பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டாலும் தடைகளை உடைத்தெறிந்து பதக்கம் வென்றவர். இந்தத் தடையும் உடைத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.