பீல்டிங்கில் பலத்த காயம்… சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் ‘எல்லை சாமி’ – சென்னை ரசிகர்கள் கதறல்!

 

பீல்டிங்கில் பலத்த காயம்… சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் ‘எல்லை சாமி’ – சென்னை ரசிகர்கள் கதறல்!

சிஎஸ்கே அணியின் எல்லை சாமி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பாப் டூ பிளெஸிஸ். ஸ்ட்ரைட் பீல்டிங்கில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. டெத் ஓவர்களில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அந்த ஏரியாவையே குறிவைப்பார்கள். இவரை அங்கே நிறுத்திவிட்டால் போதும். பேட்ஸ்மேன்களின் பிளான் தவிடுபொடியாகும். அதனால் அவரை அங்கே நிறுத்திவிட்டு கேப்டன் தோனி கூலாக இருக்க காரணம். தற்போது எல்லையில் பீல்டிங் செய்த எல்லை சாமிக்கு எல்லையிலேயே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் வேதனைக்குள்ளாகியிருக்கின்றனர்.

பீல்டிங்கில் பலத்த காயம்… சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் ‘எல்லை சாமி’ – சென்னை ரசிகர்கள் கதறல்!

ஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார். இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (Pakistan Super League) தொடரில் கலந்துகொண்டார். நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பெஷாவர் ஜால்மி அணியும் மோதின. குவெட்டா அணியில் தான் பிளெஸிஸ் இடம்பெற்றிருக்கிறார். ஆட்டத்தின் 7ஆம் ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்து ஸ்ட்ரைட் பவுண்டரியை நோக்கிச் சென்றது.

அப்போது பீல்டிங்கில் நின்ற பிளெஸிஸ் வேகமாக பந்தை தடுக்க முயன்றார். அதே சமயத்தில் மற்றொரு வீரரான முகமது ஹஸ்னைனும் பந்தை நோக்கி ஓடி வந்தார். இருவரும் எந்த காலும் கொடுக்கவில்லை. இதனால் பிளெஸிஸ் வேகமாக ஹஸ்னைனின் முட்டியில் மோதினார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் மயக்கம் வந்தது போல மைதானத்தில் இருந்தார். உடனடியாக மருத்துவக் குழு அவரை ட்க்-அவுட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தது.

பீல்டிங்கில் பலத்த காயம்… சுருண்டு விழுந்த சிஎஸ்கேவின் ‘எல்லை சாமி’ – சென்னை ரசிகர்கள் கதறல்!

ஆனால் காயம் பெரியளவில் இருந்ததால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து ஆராய்ந்து அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். செப்டம்பரில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருப்பதால் அதில் டு பிளெஸிஸ் கலந்துகொள்வாரா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் கவலையாக இருக்கிறது. விரைவில் குணமடைந்து மைதானத்துக்குத் திரும்புங்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.