2வது டெஸ்ட்- தோல்வியைத் தவிர்க்க போராடும் இந்திய அணி

 

2வது டெஸ்ட்- தோல்வியைத் தவிர்க்க போராடும் இந்திய அணி

இந்திய மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

Image

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி.126.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்களை எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 129 ரன்களும்,ரோஹித் சர்மா 83 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 391 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

27 ரன்கள் பின்னடைவுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை இன்று தொடங்கியது.இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக கடந்த இன்னிங்சில் சதம் அடித்த கே.எல் ராகுல் 5 ரன்களில் உட்டின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரலர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.நன்றாக வந்த ஆடி வந்த ரோகித் சர்மாவை அவரது பலமான புல் சாட்டை ஆட வைத்து , எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் ஆக்கி வெளியேற வைத்தார் மார்க் உட்.அடுத்த வந்த கேப்டன் கோலி இந்த இன்னிங்ஸிலும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார்.இதன்பிறகு பார்மில் இல்லாத புஜாரா மற்றும் துணை கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தனர்.ரகானே நிதானமாக ஆட புஜாரா ஆமை வேகத்தில் ஆடினார்.தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்துள்ளது.

2வது டெஸ்ட்- தோல்வியைத் தவிர்க்க போராடும் இந்திய அணி


புஜாரா 148 பந்துகளில் 29 ரன்களுடனும், ரகானே 74 பந்துகளில் 24 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.இன்று இன்னும் 27 ஓவர்களே உள்ள நிலையில் இந்திய அணி 78 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.இந்திய அணிக்கு இன்னும் 7 விக்கெட் மட்டுமே உள்ளதால் , இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் கையே சற்று ஓங்கி உள்ளது.