இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – 78 ரன்களில் சுருண்டது இந்திய அணி!

 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் – 78 ரன்களில் சுருண்டது இந்திய அணி!

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. லாட்ஸில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.

Image

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மார்க் உட், சிப்லி ஆகியோர் நீக்கப்பட்ட ஓவர்டன் மற்றும் டேவிட் மலன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக கேஎல் ராகுல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த புஜாரா 1 ரன்களிலும்,கேப்டன் கோலி 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 19 ரன்களும், ரகானே 18 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் இவர்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்க எண்ணை தொட்டனர். மீதியுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் 40 புள்ளி 4 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.