டிஎன்பிஎல்: 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்திய திருச்சி

 

டிஎன்பிஎல்: 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்திய திருச்சி

இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் நெல்லை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

Image

டாஸ் வென்ற நெல்லை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அமித் சாத்விக் மட்டும் ஒருபுறம் நிதானமாக ஆட. மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. ஆதித்யா கணேஷ் 33 ரன்களிலும் , அமித் சாத்விக் 71 ரன்களிலும் ஆட்டமிழக்க, இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அந்தோணி தாஸ் 20 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதன்பின் தனது இன்னிங்சை தொடங்கிய நெல்லை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சுனில் சாம் மற்றும் சரவணகுமார் ஆகியோர் தங்களது துல்லியமான பந்துவீச்சில் 6 ஓவர்களில் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிகபட்சமாக இந்திராஜித் 32 ரன்களிலும், சஞ்சை யாதவ் 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 10 விக்கெட்களையும் இழந்த நெல்லை அணி 13.4 ஓவர் முடிவில் 77 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது