56 ரன்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான் - இறுதிப்போட்டியில் முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா

 
vv

டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டி  தொடங்கியது.  இதில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆப்கானிஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் எடுத்தது. 

gg

தொடர்ந்து அபாரமாக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா அணியிடம் திணறிய  ஆப்கானிஸ்தான் அணி  11 ஓவர் ஐந்து பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களில்   சுருண்டது.  57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதையடுத்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணி, உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

vv

அதேசமயம்  டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.