பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் திரில் வெற்றி

 
Indvspak

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 பிரிவு ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் என்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் துவக்காட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். தொடர்ந்து சொதப்பி வந்த இந்த ஜோடி முறை அதிரடி துவக்கம் தந்தது.ரோகித் சர்மா 16 பந்துகளில் 28 ரன்களும்,கே.எல் ராகுல் 20 பந்துகளில் 28 ரன்களும் அடித்து அதிரடி துவக்கம் தந்தனர். ஒருபுறம் விராட் கோலி சிறப்பாக ஆட மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சிறப்பாக ஆடிய கோலி 36 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.இது விராட் கோலியின் 32வது டி20 அரை சதமாகும். சர்வதேச டி20 களில்  அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி  படைத்துள்ளார்.சிறப்பாக ஆடிய கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 சேர்த்தது.

 182 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் அதிரடியாக ஆடி 71 ரன்கள் சேர்த்தார். அடுத்த களம் இறங்கிய நவாஸ் 20 பந்துகளில் 42 அடித்து ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் கொண்டு வந்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டியது பாகிஸ்தான். இதன் மூலம் இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.