காமன்வெல்த் மல்யுத்தம் - வெள்ளி வென்றார் அன்ஷூ மாலிக்

 
anshu malik

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார். 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 3-7 என்ற கணக்கில் 2 முறை சாம்பியனான ஒடுனயோ போலாசட்விடம் தோல்வி அடைந்தார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.  இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதேபோல் அடுத்து நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் மற்றும் மோஹித் கிரேவால் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தினர்.