நீங்கள் எனது பேட்டிங்கை பார்த்ததில்லை என நினைக்கிறேன் - சூர்யகுமாரை கலாய்த்த டிராவிட்

 
suryakumar and dravid

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்துள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.   டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்காட்டக்காரராக களம் இறங்கிய இசான் கிசன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். 16 பந்துகளை சந்தித்த அவர், 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 45 பந்துகளில் சதம் அடித்த அசத்தினார். சர்வதேச டி20 அரங்கில் அவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். இறுதியாக சூரியகுமார் யாதவ் 112 ரன்ள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.

Suryakumar Yadav having no limit in T20I

229 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இதனால் அந்த அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடாரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்த சூர்யகுமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து ஆட்டம் முடிந்த உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமாரை நேர்காணல் செய்தார். அந்த உரையாடலில் சூர்யகுமார் குறித்து பேசிய டிராவிட் , என்னுடன் இங்கே ஒருவர் இருக்கிறார், அவர் சிறுவயதில் இருந்தபோது நான் பேட்டிங் செய்வதைப் பார்க்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். சூர்யா நீங்கள் பார்த்ததில்லை என்று நம்புகிறேன். சூர்யகுமார், விதிவிலக்கானவர். உங்களுக்குள் இருக்கும் சிறந்த பார்ம், என்னை ஒவ்வொரு முறையும், சிறந்த டி20 இன்னிங்ஸைப் பார்க்கவில்லை என்று நினைக்க வைக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடுத்தடுத்து எங்களுக்கு இன்னும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி காட்டுகிறீர்கள். இவ்வாறு கூறினார்.