டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா - ஆடும் லெவன் இதுதான்!

 
toss

டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேவு செய்துள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை  வீழ்த்தி நான்கு புள்ளிகளுடன் குரூப்2 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று பெர்த்தில் நடைபெறவுள்ள போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி ஏறக்குறைய உறுதி செய்துவிடும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

IND Virat

இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(வ), ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

தென் ஆப்ரிக்க அணி விவரம் : குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே உள்ளிட்டோர் தென் ஆப்ரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.