காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்

 
common wealth india table tennis

காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. 

Commonwealth Games 2022 Medal Tally: CWG Medal Table and India medals in  Birmingham

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான அணி பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த சரத்கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகிய வீரர்களும் உள்ள நிலையில், டேபிள் டென்னிஸ் இரட்டையர் ஆடவர் பிரிவில் சத்யன் ஞானசேகரன், ஹர்மீட் தேசாய் வெற்றி பெற்றுள்ளனர். ஒற்றையரில் சத்யன் ஞானசேகரன், ஹர்மீட் தேசாய் வெற்றியால் இந்தியா தங்கம் வென்றது. 

2018 கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. தொடர்ந்து 2வது முறையாக காமன்வெல்த் அணி பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். முன்னதாக காமன்வெல்ஸ் போட்டியில் இந்தியா இன்று மட்டும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.