தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்த அக்சர் பட்டேல்

 
axar patel

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், 17 ஆண்டுகால தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங்க் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஒவர்கள் முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில்  312 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய அக்சர் பட்டேல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.  

dhoni

இந்நிலையில், நேற்றைய போட்டியில் அக்சர் பட்டேல் தோனியின்  17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதாவது இலக்கை விரட்டும் போது 7ம் நிலையில் இறங்கும் இந்திய வீரர் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச சிக்சர்கள் எண்ணிக்கையில், தோனியின் சாதனையை முறியடித்தார். அதாவது தோனி 2005ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் 7வதாக களமிறங்கி 3 சிக்சர்களை அடித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் அக்சர் பட்டேல் 7வதாக களமிறங்கி 5 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் அக்சர் பட்டேல் தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதானும் 7வது இடத்தில் களமிறங்கி 3 சிக்சர்களை அடித்து தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.