காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 
AUSW

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நேற்றிரவு தொடங்கியது. முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று நடைபெற்றது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவூர் 52 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜான்னசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆஸ்லே ஹார்னே 52 ரன்கள் எடுத்தார்.