செஸ் ஒலிம்பியாட் - எதிர் அணி அனைத்தையும் வீழ்த்தி இந்திய அணி ஒயிட் வாஷ் வெற்றி!

 
ChessOlympiad

நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் எதிரணியை வீழ்த்தி ஆடவர், மகளிர் அணி வெற்றி பெற்றனர். இந்திய சார்பாக விளையாடிய 24 வீரர்களும் வெற்றி அடைந்தனர். 

Image


44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி முதல் போட்டி இன்று நடைபெற்றது.இதில் 187 நாடுகள் 188 பொது அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 162 அணிகள் என மொத்தம் 350 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியாவின் முதல் அணியினர் ஜிம்பாப்வே அணியோடு மோதினர். இதில், இந்தியா 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இந்தியாவின் 2வது அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் விளையாடினர். அதிலும் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதியாக இந்திய அணி தெற்கு சூடானுடன் களமிறங்கி அதிலும் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

Image

இறுதியாக நடைபெற்ற மகளிர் போட்டியில் இந்தியாவின் முதல் அணி வீராங்கனை தான்யா சச்தேவ் தஜிக்கிஸ்தான் வீராங்கணையை ஐந்தரை மணி நேரம் போராடி வீழ்த்தினார். 103 வது நகர்த்தலில் வெற்றியை அவர் எட்டினார். இன்று நடைபெற்ற போட்டிகளிலேயே அதிக காய் நகர்த்தல் இந்த போட்டியின் போது நிகழ்ந்தது. இதன்மூலம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின்  பொது பிரிவின் கீழ் பங்குபெற்ற 3 ஆண்கள் அணிகளும் முதல் சுற்றில் வெற்றியை பெற்றனர். 


பெண்கள் பிரிவில் பங்கேற்ற 3 இந்திய அணிகளும் எதிரணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. இந்திய பெண்கள் 1வது அணி தஜிக்கிஸ்தான் அணியையும், இந்தியா 2வது அணி வேல்ஸ் அணியையும், இந்தியா 3வது அணி ஹாங்காங்கை வீழ்த்தியது. 3 அணிகளுக்கும் முதல் சுற்றில் தலா 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. மொத்தமாக இந்தியாவின் 3 பொது பிரிவு அணிகளும், 3 இந்திய பெண்களும் என இந்தியா முதல் சுற்றில் 6 சுற்றுகளில் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளை கைப்பற்றியுள்ளது