தண்ணி காட்டிய ஆர்சிபிக்கு கடைசி ஓவரில் ட்விஸ்ட் வைத்த ஜடேஜா!

 

தண்ணி காட்டிய ஆர்சிபிக்கு கடைசி ஓவரில் ட்விஸ்ட் வைத்த ஜடேஜா!

ஐபிஎல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து நான்கு போட்டிகள் தோல்வியைச் சந்திக்காத ஆர்சிபி ஹாட்ரிக் வெற்றி கண்ட சிஎஸ்கே. இரு பக்கமும் பலமான வீரர்கள் இருப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

தண்ணி காட்டிய ஆர்சிபிக்கு கடைசி ஓவரில் ட்விஸ்ட் வைத்த ஜடேஜா!

வழக்கம் போல டாஸில் கோலி தோற்றார். டாஸ் ஜெயித்த தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் இரு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மொயின் அலி, இங்கிடி ஆகியோருக்குப் பதிலாக தாஹிர், பிரோவா உள்ளே வந்தனர். ஆர்சிபியில் ரிச்சர்ட்ஸன், சபாஷ் அஹமத்துக்குப் பதில் கிறிஸ்டியன், சைனி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

Image

தொடக்க வீரர்களாக ருதுராஜும் டுபிளெஸ்சிஸும் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த போட்டியில் இருந்த அதே ஃபார்மை இருவரும் தொடர்ந்தனர். தவறான பந்துகளை மட்டும் அடித்து நொறுக்கினர். நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்திருந்த நிலையில் ருதுராஜ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரெய்னா 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே நன்றாக செட்டிலாகியிருந்த டுபிளெஸ்ஸும் ஹர்சல் படேலிடம் வீழ்ந்தார். இதனால் சிஎஸ்கே அணி சற்று தடுமாறியது.

Image

அடுத்தடுத்து வந்த ராயுடுவும் ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்தனர். ஆனால் ராயுடுவை மும்பை வெயில் வாட்டி வதைத்துவிட்டது. வேறு வழியில்லாமல் ஹர்சல் படேல் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் கட்டுக்கோப்பாக பந்து வீசி எங்கேயோ போக இருந்த ஸ்கோரை தடுத்து நிறுத்தினர் ஆர்சிபி பவுலர்கள். தோனியாலும் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. ஆனால் கடைசி ஓவரில் ஜடேஜா செம ட்விஸ்ட் வைத்து ஹர்சல் படேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து கடைசி ஓவரில் 37 ரன்கள் எடுத்து 191 ரன்கள் சிஎஸ்கே எடுத்தது. 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடித்து அதகளம் செய்தார்.