கோலியை பழிதீர்த்த தவான்… ‘நம்பிக்கை’ ராகுல்… விளாசி தள்ளிய குருணால்!

 

கோலியை பழிதீர்த்த தவான்… ‘நம்பிக்கை’ ராகுல்… விளாசி தள்ளிய குருணால்!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி ஒருநாள்,டெஸ்ட்,டி20 என மூன்று விதமான தொடர்களிலும் விளையாடிவருகிறது. இதில் டெஸ்ட் தொடரிலும் டி20 தொடரில் இந்தியா வென்றது. கோப்பையையும் கைப்பற்றியது. இன்று ஒருநாள் போட்டி தொடங்கியிருக்கிறது. வழக்கம்போல கோலி டாஸில் தோற்றார். டாஸ் வென்ற மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

Image

இந்திய அணிக்குள் குருணால் பாண்டியாவும் பிரஷித் கிருஷ்ணாவும் அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர். டி20 போட்டிகளில் சம்பவம் செய்த ரோஹித் சர்மா இன்றைய ஒருநாள் போட்டியில் அவ்வளவாக சோபிக்கவில்லை. 28 ரன்களோடு நடையைக் கட்டினார். அவருடன் வந்த ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி20 போட்டிகளில் என்னை ஏன் உட்கார வைத்தீர்கள் என்று கேட்பது போல சொல்லி சொல்லி போர்களை அடித்து நொறுக்கினார். அவருடன் கேப்டன் கோலியும் இணைய ரன் வேட்டை தொடர்ந்தது.

Image

நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் 32.1 ஓவரில் கோலி விக்கெட்டை தூக்கி அதிர்ச்சி கொடுத்தார் மார்க் வுட். அரைசதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த ஸ்ரேயாஷும் வந்த வேகத்தில் வெளியேற தவானின் சதமடிக்கும் கனவு தகர்ந்தது. அவரும் அடுத்த பத்து ரன்களில் அவுட்டாகி 2 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். தவான் பின்னாலேயே அதிரடி ஆட்டக்காரார் பாண்டியா 1 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். டி20 போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலும் கேஎல் ராகுலுக்கு ஒருநாள் போட்டியிலும் கோலி வாய்ப்பு கொடுத்தார்.

Image

கோலியின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். பின்வரிசையில் அணிக்கு ரன்கள் சேர்த்து 300 ரன்களைத் தாண்ட உதவிசெய்தார். அவருக்கு அறிமுக வீரராகக் களமிறங்கிய குருணால் பாண்டியாவும் கம்பேனி கொடுத்தார். இருவரும் அரைசதம் அடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் இந்திய அணி 317 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.