‘வட்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி’ யோகேஷ் கத்தூனியா சாதனை!

‘வட்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி’ யோகேஷ் கத்தூனியா சாதனை!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஸ் கதுன்யா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

‘வட்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி’ யோகேஷ் கத்தூனியா சாதனை!

பாராலிம்பிக் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் யோகேஷ் கத்துனியா வெள்ளி பதக்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்றது இந்தியா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடவர் வட்டு எறிதல் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். வட்டு எறிதலில் 44.38 மீட்டர் வீசி அவர் சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

‘வட்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி’ யோகேஷ் கத்தூனியா சாதனை!

இதனிடையே டோக்கியோ பாராலிம்பிக் போட்டி தொடரில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம் வென்று பெருமை சேர்த்த நிலையில் இந்தியாவுக்கான முதல் தங்கம் கிடைத்துள்ளது.