கேப்டன் விராட் கோலியிடம் நற்பெயர் சம்பாதித்த கே.எல்.ராகுல் – அப்போ ரிஷப் பண்ட் கதி?

 

கேப்டன் விராட் கோலியிடம் நற்பெயர் சம்பாதித்த கே.எல்.ராகுல் – அப்போ ரிஷப் பண்ட் கதி?

கே.எல்.ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மும்பை: கே.எல்.ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமாக இந்திய அணியை வென்றது. ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்திய அணி அடுத்தடுத்து இரு போட்டிகளிலும் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. முதல் ஒருநாள் போட்டியின்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட் தலையை தாக்கியது. இதனால் அவர் உடனடியாக பாதி ஆட்டத்திலேயே வெளியேறினார்.

rishabh pant

இதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை பார்த்துக் கொண்டார். மூன்றாவது போட்டியின்போது ரிஷப் பண்ட் விளையாட உடற்தகுதி பெற்று விட்டார். எனினும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கே.எல்.ராகுலே விக்கெட் கீப்பராக விளையாடினார். இந்த நிலையில், விராட் கோலி அண்மையில் பேசும்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுல் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைப்பதுடன், அணியின் பேலன்ஸ் சரியாக அமையும் என்று கோலி கூறியுள்ளார்.

kl rahul

விராட் கோலியின் நன்மதிப்பை கே.எல்.ராகுல் பெற்றிருப்பதால் இளம் வீரரான ரிஷப் பண்ட் கிரிக்கெட் எதிர்காலம் என்னவாகும் என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்!