உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்? போட்டி போடும் 4 அணிகள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

வலுவான நிலையிலிருந்த ஆஸ்திரேலியா எதிர்பாரா விதமாக சொந்த மண்ணிலேயே இந்தியாவால் வீழ்த்தப்பட்டது. இது புள்ளி பட்டியலிலும் எதிரொலித்திருக்கிறது. இதனால் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தலையெழுத்தை தீர்மானிக்க போகிறது. மொத்தமாக 89 புள்ளிகள் ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்படுகிறது.

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. ஒன்பது அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன.

இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் ஆறு தொடர்களில் (சொந்த மண்ணில் 3, அயல்நாட்டில் 3) விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகளை நடத்தலாம். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்படும். போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் படி புள்ளிகள் பிரித்தளிக்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதும். அப்போட்டி டிரா ஆகும் பட்சத்தில் இரு அணிகளும் சாம்பியனாக அறிவிக்கப்படும். இவ்வாறான விதிமுறைகளை ஐசிசி வகுத்து தொடரை நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் வருடத்திலிருந்தே இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தது. இச்சூழலில் கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது.

அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும் என்பதால், கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு நெருக்கடி உண்டானது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

இச்சூழலில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக இந்தியா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து நான்காம் இடத்தில் இருப்பதால் அந்த அணிக்கும் கூடுதல் சவாலாகவே இருக்கிறது. முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதில் இந்த நான்கு அணிகளுக்குள்ளும் மிகக் கடுமையான போட்டி நிலவிவருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

இந்நிலையில் தான், பார்டர்-கவாஸ்கர் தொடர் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அதைவிட முக்கியமாக இங்கிலாந்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது. நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் தான் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்பதை உறுதிப்படுத்தும் காரணியாக இருந்தன.

இரண்டு போட்டிகளில் தோற்றால் கூட இறுதிப் போட்டி வாய்ப்பு மங்கிவிடும். இதனைக் கருத்தில் கொண்டு விளையாடிய இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கோ பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

இந்தத் தொடரின் வெற்றி மூலம் இந்தியா புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நியூஸிலாந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நான்கு அணிகளும் எத்தனை புள்ளிகள் எடுத்தால் இறுதிப் போட்டி வாய்ப்பைக் கைப்பற்ற முடியும் என்பது குறித்த விவரம் பின்வருமாறு:

இந்தியா

இந்தியாவில் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 80 புள்ளிகள் வேண்டும் (தொடருக்கான மொத்த புள்ளி 120). இதனால் இந்தியா கட்டாயமாக 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்ற வேண்டும் (மற்ற 2 போட்டிகள் டிராவில் முடிவடைய வேண்டும்).

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

ஒரு போட்டியில் தோற்றால் மற்ற மூன்று போட்டிகளில் கட்டாயமாக வெற்றிபெற்றாக வேண்டும். ஒரு டிராவானால் கூட வாய்ப்பை பறிபோகலாம். இருப்பினும், கடந்த எட்டு வருடங்களாக இந்தியாவில் நடைபெற்ற 34 போட்டிகளில் 28இல் வெற்றி கண்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது. ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து நான்காம் இடத்தில் இருந்தாலும் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி போட்டியில் தானும் இருப்பதாக மெசெஜ் பாஸ் செய்துள்ளது. இருப்பினும், அடுத்த போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றே ஆக வேண்டும் (2-0).

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

அதுமட்டுமில்லாமல், இந்தியாவுடனான தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இரண்டாம் இடத்தை நினைத்துப் பார்க்க முடியும். 2-2 என்ற கணக்கில் தொடரின் முடிவு அமைந்தாலும் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது மிக மிக கடினமாகிவிடும். இந்தியாவைப் போலவே இங்கிலாந்துக்கும் இந்தத் தொடர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

ஆஸ்திரேலியா

வலுவான நிலையிலிருந்த ஆஸ்திரேலியா எதிர்பாரா விதமாக சொந்த மண்ணிலேயே இந்தியாவால் வீழ்த்தப்பட்டது. இது புள்ளி பட்டியலிலும் எதிரொலித்திருக்கிறது. இதனால் பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தலையெழுத்தை தீர்மானிக்க போகிறது. மொத்தமாக 89 புள்ளிகள் ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்படுகிறது.

இந்தத் தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 1ல் டிரா செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் 93 புள்ளிகள் கிடைக்கும். இந்தியாவுடனான மெல்போர்ன் போட்டியில் மெதுவான ரன் விகிதம் காரணமாக 4 புள்ளிகளை (-4) இழந்ததும், பிரிஸ்பேனில் தோற்றதும் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. சாம்பியன்ஷிப் தொடரின் லீக் முடிவில் இரு அணிகளும் ஒரே புள்ளிகளைப் பெற்றால் ரன்/விக்கெட் விகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

உதாரணமாக நியூஸிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தலா 70 புள்ளிகளை எடுத்தால், அணி ஒரு விக்கெட்டுக்கு எத்தனை ரன்கள் எடுத்திருக்கிறது என்ற விகிதம் கணக்கிடப்பட்டு, அதிகம் இருக்கும் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இறுதிப் போட்டியில் விளையாடும். தற்போது நியூஸிலாந்தின் விகிதம் 1.28 ஆகவும், ஆஸ்திரேலியாவின் விகிதம் 1.39 ஆகவும் உள்ளன.

இந்தியாவுடனான அந்த 4 புள்ளிகளை விடாமல் இருந்திருந்தால், இந்த விகிதத்தின் அடிப்படையில் நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா முந்தியிருக்கும். தற்போது ஆஸ்திரேலியா முழுவதுமாக தென்னாப்பிரிக்கா தொடரையே நம்பியிருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றிபெற வேண்டும் அல்லது இங்கிலாந்து தொடரில் இந்தியா சில புள்ளிகளை இழக்க வேண்டும். இதில் எதாவது ஒன்று நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க முடியும்.

நியூஸிலாந்து

நியூஸிலாந்தைப் பொறுத்தவரையில் அதன் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. குறிப்பாக, இரு போட்டிகள் வங்கதேச அணியுடன் மோதவிருப்பதால் அதில் 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் 120 புள்ளிகளை அசால்ட்டாக தட்டிவிடும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பைனலில் மோதப் போவது யார்? யாருக்கு எத்தனை புள்ளிகள் வேண்டும்?  போட்டி போடும் 4 அணிகள்!

இதனால் அந்த அணிக்கு எந்த நெருக்கடியும் இல்லை. முதல் இரண்டு இடங்களில் ஒன்றை நியூஸிலாந்து உறுதிசெய்துவிட்டது. இரண்டாம் இடத்திற்குத் தான் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே சவாலான போட்டி நிலவுகிறது.

இனிமேல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, அனல் பறக்கும். ஐசிசியும் அதைத் தானே விரும்பியது. ஜூன் மாதம் லார்ட்ஸ்டில் மோதப் போவது யார்? யார்? முடிவு மிக விரைவில்!