ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

 

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

மஹி, தோனி, கூல் கேப்டன் என பல பெயரால் மஹேந்திர சிங் தோனி அழைக்கப்பட்டாலும் ‘தல’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்தான்.

தோனி ‘தல’ என்றால், ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. எப்போதும் ரெய்னாவை சிஎஸ்கேவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கு ஏற்ப ஐபிஎல் என்றால் வெறி பிடித்ததைப் போல ரன் மிஷினாகி விடுவார் ரெய்னா.

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

ரெய்னாவின் ஐபிஎல் கரியரில் 193 மேட்ச்கள் ஆடி, 5368 ரன்களைக் குவித்திருக்கிறார். பவுலிங்கில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைசெய்யப்பட்ட காலம் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே ஆடியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே (2008-2015, 2018-2019) சுரேஷ் ரெய்னா 164 மேட்ச்களில் ஆடி, 4527 ரன்களைக் குவித்திருக்கிறார். 412 ஃபோர்களையும் 171 சிக்ஸர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசியிருக்கிறார்.

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

இன்றைய தேதி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னாவே. இவருக்கு அடுத்த நிலையில்தான் தேனி இருக்கிறார்.

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக போட்டிகள் ஆடிய வீரரும் சுரேஷ் ரெய்னாதான். மொத்தம் 164 மேட்ச்கள். அதிக கேட்ச் பிடித்த பீல்டர் எனும் பெருமையும் சுரேஷ் ரெய்னாவுக்கே. அவர் இந்த அணிக்காக பிடித்த கேட்ச் 91.

போட்டியின் தன்மைக்கு ஏற்ப தன் ஆட்டத்தை அமைத்துக்கொள்வதில் சுரேஷ் ரெய்னா தனித்துவம் மிக்கவர். இந்த ஐபிஎல் போட்டியில் அவர் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐக்கிய அமீரகத்திற்கும் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார். ஆனால், திடீரென்று இந்தியா திரும்பிவிட்டார். ரெய்னாவின் குடும்ப பிரச்னை காரணமாகவே அவர் நாடு திரும்பினார் என்று கூறப்பட்டது.

அதன்பின், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை தொடர்பாக அதிருப்தி அடைந்தார் என்று காரணம் செல்லப்படுகிறது. கேப்டன் தோனியுடன் கருத்து மோதலால்தான் விலகினார் என்றும் சொல்லப்படுகிறது.

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மெட்ராஸ் சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன், ‘தலைக்கணம் மிகுந்துவிட்டது’ என்று பெயர் குறிப்பிடாமல் ரெய்னாவைப் பற்றி சொல்லியிருக்கிறார். மேலும், ரெய்னா இழந்ததைப் பற்றி நன்கு உணர்ந்திருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

ரெய்னாவுக்கு good bye சொல்லப்போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ்!

நடப்பதையெல்லாம் பார்க்கையில் சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்பது மட்டுமல்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இனி நீடிக்க மாட்டார் என்றே பலரும் கருதுகின்றனர். சுரேஷ் ரெய்னாவுக்கு குட்பை சொல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தயாராகி விட்டது என்றே ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்ல சிரிக்கெட் விமர்சகர்கள் கூட சுரேஷ் ரெய்னாவின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குபெரும் பின்னடைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.