ஐபிஎல் கடைசி லீக் போட்டி – மும்பை பேட்டிங்

 

ஐபிஎல் கடைசி லீக் போட்டி – மும்பை பேட்டிங்

ஐபிஎல் திருவிழாவில் கடைசி லீக் போட்டியான இன்று மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொள்கின்றன. ஆனால், இந்தப் போட்டியின் முடிவு இன்னொரு அணிக்கும் முக்கியம் அதுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் கடைசி லீக் போட்டி – மும்பை பேட்டிங்

ஐபிஎல் பாயிண்ட் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகி விட்டன. அதாவது முதலிடத்தில் மும்பை, இரண்டாம் இடத்தில் டெல்லி, மூன்றாம் இடத்தில் பெங்களூரூவும் உள்ளன.

நேற்று நடந்த டெல்லி vs பெங்களூர் மோதலில் டெல்லி வென்றாலுமே கடைசி வரை போட்டி நடந்ததால், பெங்களுரும் பிளே ஆஃப் செல்ல தகுதி பெற்றது. அதனால், இன்றைக்கு நடக்கும் மும்பை vs ஹைதராபாத் போட்டி முக்கியமானதாக மாறிவிட்டது.

ஐபிஎல் கடைசி லீக் போட்டி – மும்பை பேட்டிங்

இன்று டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பவுலிங் என முடித்துள்ளார். அதனால் மும்பை அணி வீரர்கள் பேட்டிங் ஆட தயாராகி வருகின்றனர்.