2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

 

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கொரொனா தாக்கத்தால் போட்டிகள் நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து ஐசிசி உயர்மட்ட குழு கூடி புதிய விதிமுறைகளை வகுத்தது. அதன்படி, 85 சதவிகித போட்டிகளை மட்டுமே நடத்த முடியும்.

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

கொரோனாவால் நடத்தமுடியாமல் போன தொடர்களுக்கு டிராவுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகளுக்குப் பின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் நியுஸிலாந்து அணியும் தகுதிபெற்றன. 50 ஓவர் உலகக்கோப்பைக்கு இணையான ஒன்றாக இப்போட்டி கருதப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கென்று உலகக்கோப்பை தொடர் நடத்துவது இதுவே முதல் முறை. ஆகவே முதல் கோப்பையை முத்தமிட இரு அணிகளுக்குள்ளும் பயங்கரமான போட்டி நிலவி வருகிறது.

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. சமபலத்துடன் மோதிக்கொள்ளும் இறுதிவரை போராட்டக்குணம் கொண்ட வீரர்களைக் கொண்ட அணிகளாக திகழ்கின்றன. இதன் காரணமாக யார் வெற்றிபெறுவார்கள் என்று எவராலும் கணிக்க முடியவில்லை. கூடவே 50 ஓவர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வெளியேற்றியது நியூஸிலாந்து தான். அதற்கு இந்தியா இப்போட்டியில் பழி தீர்க்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தார்கள். இதனால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

Image

அந்த எதிர்பார்ப்பை நேற்று பெய்த மழை தூள் தூளாக்கியது. முதல் நாள் ஆட்டம் மொத்தமாக ரத்துசெய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் ஆட்டம் தொடங்கியது. டாஸுக்கும் கோலிக்கும் என்றுமே ராசியிருந்தது இல்லை. அதே தான் இப்போட்டியிலும் தொடர்ந்திருக்கிறது. வழக்கம் போல இன்றைய டாஸிலும் தோற்றார். வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். மழை பெய்திருப்பதால் ஃபிட்ச்சின் தன்மை மாறியிருக்கும். ஆகவே இந்தியாவில் ஒரு ஸ்பின்னரை உட்கார வைத்து அதற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளரை எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் ஜாம்பாவான்கள் கூறினர்.

Image


ஆனால் ஏற்கெனவே அறிவித்த அணியுடனே கோலி படை களமிறங்கியது. நான்கு வேகப்புயல்களுடன் வில்லியம்சன் களமிறங்கினார். அனுபவ வீரர் ரோஹித் சர்மாவும் இளம் வீரர் சுப்மன் கில்லும் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். தவறான பந்துகளை மட்டும் ரோஹித் பவுண்டரிகளுக்கு விரட்டினார். முன்னாள் வீரர்கள் சொன்னது போலவே ஃபிட்ச் வேகப்பந்துக்கே சாதகாமாக இருக்கிறது.

Image

நன்றாக விளையாடி வந்த ரோஹித் ஜெமிசன் வேகத்தில் வீழ்ந்தார். புஜாரா வந்து கால் வைத்ததுமே சுப்மன் கில்லும் நடையைக் கட்டினார். இக்கட்டான சூழலில் கோலி புஜாராவுடன் கைகோத்திருக்கிறார். இருவரும் அணியை மீட்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி 31 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து இந்தியா ஆடிவருகிறது.