வெஸ்ட் இண்டீஸுக்கு ஓர வஞ்சனை | மொத்தமாய் சொதப்பிய அம்பயர்கள்! | உலகக் கோப்பை சர்ச்சை

 

வெஸ்ட் இண்டீஸுக்கு ஓர வஞ்சனை | மொத்தமாய் சொதப்பிய அம்பயர்கள்! | உலகக் கோப்பை சர்ச்சை

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளில் எப்பொழுதுமே தென்னாப்பிரிக்கா அணிக்கு தான் அதிர்ஷ்டம் இருக்காது. உலகின் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஜாண்டி ரோட்ஸ் காலத்தில் இருந்தே மிகச் சிறப்பாக விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி  முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய துரதிஷ்டத்தினால் போட்டியிலிருந்து நடையைக் கட்டிவிடும்.

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளில் எப்பொழுதுமே தென்னாப்பிரிக்கா அணிக்கு தான் அதிர்ஷ்டம் இருக்காது. உலகின் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஜாண்டி ரோட்ஸ் காலத்தில் இருந்தே மிகச் சிறப்பாக விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி  முக்கியமான கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய துரதிஷ்டத்தினால் போட்டியிலிருந்து நடையைக் கட்டிவிடும்.

south africa

சமயங்களில் வருண பகவான் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு குறுக்கே நின்ற கதையெல்லாம் உண்டு. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஆரம்பித்ததில் இருந்தே அந்த துரதிஷ்டம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைத் துரத்த ஆரம்பித்தது. 

west indies

நல்ல பவுலிங், பேட்டிங் வரிசை என்று கம்பீரமாய் போட்டியில் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சியான தோல்விகளை எதிர்பார்க்காத அணிகளிடம் எல்லாம் பெற்றது. ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியில், அம்பயர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கொடுத்த பல தீர்ப்புகள் போட்டி முடிந்த இரவில் கிரிக்கெட் ரசிகர்களின் தூக்கத்தை அபகரித்திருக்கும். 
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. அந்த அணி துவக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் டாப் ஆர்டரை விரைவாக இழந்தாலும், ஸ்டீவ் ஸ்மித், கோல்டர் நைல் ஆட்டத்தால் 288 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங்கைத் துவங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.  அவர்கள் பேட்டிங்கைத் தொடங்க ஆரம்பித்தப் பொழுதே களத்தில் அம்பயர்களும் தவறான தீர்ப்புகளை வழங்கத் தொடங்கி விட்டார்கள். 

wi vs aus

3வது ஓவரை வீசினார் மிட்செல் ஸ்டார்க். அந்த ஓவரின் ஐந்தாம் பந்தில் கிறிஸ் கெயிலுக்கு அம்பயர் கஃப்பானி எல்பிடபுள்யூ கொடுத்தார். உடனே ரிவ்யூ செய்து தப்பினார் கிறிஸ் கெயில். அந்த ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் ஸ்டார்க் எல்பிடபுள்யூ கேட்க, அம்பயர் அவுட் கொடுத்தார். மீண்டும், கெயில் ரிவ்யூ செய்து தப்பித்தார். பின்னர் கிறிஸ் கெயில், 5வது ஓவரில் கிறிஸ் கெயில் ரிவ்யூ செய்தும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது இது விசித்திரமான சம்பவமாக பார்க்கப்பட்டது.

5வது ஓவரில் கிறிஸ் கெயில் ஆட்டமிழந்த பந்துக்கு முந்தைய பந்தை ஸ்டார்க் வீசிய போது சுமார் 4 இன்ச் வரை காலை கிரீஸ்-க்கு வெளியே வைத்துள்ளார். அந்த பந்துக்கு அம்பயர் நோ பால் கொடுக்காமல் அடுத்த அதிர்ச்சியை வெஸ்ட் இண்டீஸுக்கு கொடுத்தார். ஒருவேளை அந்த பந்துக்கு நோ பால் கொடுத்திருந்தால், கெயில் ஆட்டமிழந்த பந்து ஃப்ரீ-ஹிட் ஆக இருந்திருக்கும். இந்த விஷயம் தெரிந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அடுத்து 30வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு தவறாக எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார் அம்பயர். ஹோல்டர் ரிவ்யூ செய்து தவறான அம்பயர் தீர்ப்பில் இருந்து தப்பினார். 

gayle

அடுத்து 36வது ஓவரில் ஹோல்டருக்கு மீண்டும் ஒரு எல்பிடபுள்யூ கொடுக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டும் ரிவ்யூ செய்து தப்பினார் ஹோல்டர். சுமார் நான்கு முறை ரிவ்யூ செய்து, நான்கு தவறான எல்பிடபுள்யூ தீர்ப்புகளில் இருந்து தப்பியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கியமான தொடர்களில் அம்பயர்கள் இதுபோன்ற தவறுகளை செய்வதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டு என்கிற பெருமையெல்லாம் எப்போதோ மைதானத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி போயிடுச்சு போல!