உலகக் கோப்பையை யார் வெல்வார் | பிரபல ஜோதிடர் அதிரடி

உலகக் கோப்பையை யார் வெல்வார் | பிரபல ஜோதிடர் அதிரடி

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளாக நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலராலும் கணிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த வருடம் உலகக் கோப்பையை இந்தியா தான் வெல்லும் என்று அடித்துச் சொல்கிறார் கேரளாவின் பிரபல எண் கணித ஜோதிடர் தாமோதரன்.

worldcup

இவர் ஏற்கெனவே சென்ற 2011 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று இவர் கணித்துச் சொன்னவர். அதே போல இப்போதும் இந்திய அணியே வெல்லும் என்று அடித்துச் சொல்கிறார்.

dhoni

அரசியல், விளையாட்டு என்று ஏற்கெனவே தாமோதரன் கணித்து சொன்ன பல விஷயங்கள் இதற்கு முன் மிகச் சரியாக நடந்திருப்பதால், பரபரப்பு கிளம்பியிருக்கிறது. லீக் மேட்ச்சில் இந்தியா எல்லா அணிகளையும் வெல்லும், இங்கிலாந்துடனான போட்டியில் மட்டும் தோல்வியைத் தழுவும்.. ஆனாலும் இறுதிப் போட்டியில் இந்தியாவே வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்று கணித்து சொல்லியிருக்கிறார்.

dhoni

இதற்கான காரணங்களாக தாமோதரன் கூறும் போது, “2011ம் ஆண்டு, 2,6,7 ஆகிய எண்கள் தான் ஆதிக்கம் செலுத்தின. தோனியின் விதி எண் 33. அதாவது 6. அதனால் அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அதே போல், தோனியின் எண்களுக்கும் விராத் கோலியின் எண்களுக்கும் அதிக மாற்றமில்லை. கோலியின் விதி எண்ணும் 33 தான். இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருக்கிறது. அதனால் இந்த வருடமும் தோனியும், விராத் கோலியும் இணைந்தே கோப்பையை வெல்வார்கள்” என்று கணித்திருக்கிறார்.