“வெற்றியோ… தோல்வியோ… ஒரு கை போட்டு பாத்துடனும்” – வீரர்களுடன் உற்சாகம் பொங்க பேசும் டிராவிட்!

 

“வெற்றியோ… தோல்வியோ… ஒரு கை போட்டு பாத்துடனும்” – வீரர்களுடன் உற்சாகம் பொங்க பேசும் டிராவிட்!

கிரிக்கெட் உலகில் நேற்று நடைபெற்ற இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி பெரும் பேசுபொருளாகியுள்ளது. தோற்கும் நிலையிலிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து த்ரில் வெற்றியைச் சுவைத்தது இந்திய அணி. இன்னொரு பக்கம் மிக எளிதாக வெற்றிபெற்றிருக்க வேண்டிய போட்டியை தவறான முடிவுகளால் மிகவும் கடினமாக்கி வெற்றியையும் தொடரையும் தாரை வார்த்துள்ளது இலங்கை. இலங்கை கேப்டனையும் பவுலர்களையும் இலங்கையின் முன்னாள் ஜாம்பாவான்கள் திட்டி தீர்க்கின்றனர்.

“வெற்றியோ… தோல்வியோ… ஒரு கை போட்டு பாத்துடனும்” – வீரர்களுடன் உற்சாகம் பொங்க பேசும் டிராவிட்!

மறுபுறம் இந்திய இளம் அணியை முன்னாள் இந்திய வீரர்களும் சீனியர் டீம் மேட்களும் கொண்டாடி தீர்க்கின்றனர். 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த இந்திய அணியை தீபக் சஹரும் புவனேஷ்வர் குமாரும் நங்கூரம் பாய்ச்சி விக்கெட் விழாமல் ரன்களைச் சேர்த்து வெற்றிபெற வைத்தனர். தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்தச் சிறப்பான வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் பிசிசிஐ ட்விட்டரில் கலக்கலான வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

Image

இந்திய வீரர்களிடம் ஓய்வறையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உற்சாகமாகப் பேசிய வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ”இன்றையா போட்டியில் மிக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாம் வெற்றியை ருசித்திருக்கிறோம். நாம் வெற்றிபெறாவிட்டாலும் நான் நிச்சயம் கவலைப்பட்டிருக்கவே மாட்டேன். ஏனென்றால் நீங்கள் கடைசி வரை வெற்றிக்காகப் போராடினீர்கள். அதைத் தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்திசெய்தது மட்டுமல்லாமல், நான் எதிர்பார்க்காத வெற்றியையும் பெற்றுவிட்டீர்கள்.

வெற்றி பெறாவிட்டாலும்கூட கடைசிவரை போராடுவது முக்கியம். சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள். நாம் எதிரணியை எப்போதுமே மதிக்க வேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல் இலங்கை அணி மீண்டு வந்துள்ளது. நம்முடைய அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாகத்தான் இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங், அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளீர்கள். எல்லோரும் அவர்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது” என்கிறார்.