கொரோனாவை வென்ற தீபக் சாஹர் – பலம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

 

கொரோனாவை வென்ற தீபக் சாஹர் – பலம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

கொரோனா பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனாவை வென்ற தீபக் சாஹர் – பலம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னையில் பயிற்சி எடுத்த சிஎஸ்கே வீரர்கள் உற்சாகத்துடன் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றார்கள். ஆனால், சொந்த காரணத்தால் சுரேஷ் ரெய்னா விலகினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினைச் சேர்ந்த 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பந்துவீச்சாளர் தீபக் சாஹர். இது அணிக்குப் பெரும் பின்னடைவு என்றே கருதப்பட்டது.

தீபக் சாஹர் சிகிச்சையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அளிக்கப்பட்டது. தீபக் சாஹரின் தனிமைப் படுத்தல் நாள்கள் முடிந்து பயிற்சிக்கு உற்சாகத் திரும்பியிருக்கிறார்.

கொரோனாவை வென்ற தீபக் சாஹர் – பலம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன், ‘தீபக் சாஹருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில் நெகட்டிவ் என வந்துவிட்டது. அதனால், அவர் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்’ என்று தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னனி பந்துவீச்சாளர் தீபக் சாஹர். அவர் கொரோனாவை வென்று பயிற்சிக்குத் திரும்பியது அணிக்குப் பெரும் பலமாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.  

ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவரின் விலகலால் தொய்வடைந்த சிஎஸ்கே தீபக் சாஹரின் மீட்சி தொடக்க ஆட்டத்தில் இவரும் பங்கேற்பார் என்றே நம்புகிறார்கள்.