kaappan-mobile kaappan-large
  • September
    23
    Monday

Main Area

spiritual

விநாயகர்

பிள்ளையாரை வணங்கும் போது ஏன் தலையில் குட்டிக் கொள்கிறோம்...? காவிரியை உருவாக்கிய கணபதி!

சிவனை வேண்டிய அகத்தியருக்கு தன் தலையிருந்து செல்லும் கங்கையின் ஒரு பகுதியை அகத்தியருக்கு கொடுத்தார்.
God

இறைவன் நம்முடனே இருக்க வேண்டும்!

ஒரு ராஜா,  தன்னுடைய மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடம் இருந்து கப்பம் வசூலித்து வர அனுப்பி கொண்டிருந்தார்.  கப்பம் வசூலித்து, நாடு திரும்பும் போது  ஒரு அடர்ந்த காட்டை கடந்து தான் ...


தட்சிணாமூர்த்தி,நவகிரக குரு

நவகிரக குருவா? தட்சிணாமூர்த்தியா? யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும்?

எப்பொழுதெல்லாம் குரு பெயர்ச்சி வருகிறதோ.. அப்பொழுதெல்லாம் பக்தர்கள் குழம்பி போகிறார்கள். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு ...கோவில் மணி

கோவிலுக்குச் செல்லும் போதும், இறைவனை வழிபடும் போதும் ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்?

பல ஆன்மிக செயல்களுக்கு காரண காரியங்கள் தெரியாமலேயே, நமது முன்னோர்கள் வழிவழியாகச் செய்து வந்தார்கள், நாமும் அதைப் பின்பற்றுகிறோம் என்று நடைமுறையில் செய்து வருகிறோம். 


சேலம்

சிலை கிடைத்தால் தான் மழை பெய்யும்: அருள்வாக்கால் ஆற்றில் அம்மன் சிலையை தேடும் பக்தர்கள்; சேலத்தில் பரபரப்பு!?

அருள்வாக்கு கூறியதையடுத்து  காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையைச் சேலம் மக்கள் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆரண்யேஸ்வரர்

1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கணுமா...இவரை வணங்குங்க… பாடல்பெற்ற தலங்கள் வரிசை - 12, கீழைத் திருக்காட்டுப்பள்ளி

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.திருவெண்காட்டில் இருந்து கீழமுதுகுளம் வழியாகப் போனால் 1 கி.மீட்டர்தான். தரங்கம்பாடியில் இருந்து வருவதனால்,அல்லிவிளாகம் வந்து அங்கிருந்து கீழமுதுளம் வழ...


பல்லவனேஸ்வரர் கோவில்

அழகிய கண்களுடைய பெண்களும்...அவர்கள் பாடுவதை கேட்க கூடிய மக்களுமாய்: வாழ்வாங்கு வாழ்ந்த பல்லவனேசுவரம் பாடல்பெற்ற தலங்கள்- 10

சீர்காழி,பூம்புகார் சாலையில்,பூம்பூகாருக்குள் நுழையும்போது கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலையின் இடது புரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் பல்லவநேசுவரர்,அம்மை செள்ந்தர நாயகி.


அட்சய திருதியை

தங்கத்துக்கு பதிலாக உப்பு வாங்கினால் கூட போதும்...அக்ஷய திருதியைக்கான முழு பலனும் கிடைக்கும்

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி நாள், அட்சய திருதியை என்று அழைக்கிறோம்.


கோப்புப்படம்

டாட்டா காட்டிய ஃபானி புயல்...விடுவோமா நாங்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது

 பாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி

சீர்காழி: உடலில் எந்த நோயிருந்தாலும் அதிலிருந்து விடுதலை பெற,இந்த திருத்தலத்தில் வந்து நீராடுங்கள். 

சிதம்பரத்தில் இருந்து,சீர்காழி போகும் சாலையில் கொள்ளிடம் சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர்,முதலை மேடு கடந்தால் மயேந்திரப்பள்ளி. இப்போது கோவிலடிப் பாளையம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு இந்திரன் வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திர பள்ளி என்று பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

temple

கோவில்,கொள்ளிடம் ஆற்றின் கழிமுகத்தில் கடலுக்கு இரண்டு கி.மீ முன்னதாக ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.66 செண்ட் பரப்பளவில் ஒற்றை பிரகாரம் கொண்ட கோவில்.மூலவர் சுயம்புலிங்கமான அருள்மிகு திருமேனி அழகர்.அம்மன் வடிவாம்பிகை மூன்றுநிலை ராஜகோபுரம் கொண்ட அழகிய புராதன ஆலயம் மயேந்திரப்பள்ளி.

temple

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயத்தின் எதிரே மகேந்திர தீர்த்தம். சூரியன், சந்திரன், பிரம்மன்,முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்.விலங்குகள், நீர்வாழ்வன, ஊர்வன,பறப்பன ஆகியவையும் இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததாக தலபுராணம் சொல்கிறது. கோவிலின் முன்னால் இருக்கும் இந்திர தீர்த்தத்தில் ஒருமண்டலம் ( நாற்பது நாட்கள்) நீராடி வழிபட்டால் எந்த உடல் நோயிலிருந்தும் விடுதலை பெறலாம் என்பது இந்த கோவில் பக்தர்களின் நம்பிக்கை.திருமேனி அழகர்,வடிவாம்பிகை ஆகிய பெயர்களுக்கு ஏற்ப இறைவன் அம்பிகை திருவுருவச் சிலைகள் எழிலுடன் அமைந்திருக்கின்றன.திருநாவுக்கரசர் உற்சவர் சிலையும் பேரழகுடன் இருக்கிறது.

temple

தேவாரப் பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது ஆறாவது. திருநாவுக்கரசர் திருப்பதிகம் பெற்றது.இத்தலத்தில் உள்ள முருகன் மீது அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய வேண்டிய கோவில் இது...

Aarthi Sat, 04/20/2019 - 11:20
Mahendrapalli Tirumeni Azhagar Temple temple spiritual  மயேந்திரப்பள்ளி ஆன்மிகம்

English Title

Mahendrapalli Tirumeni Azhagar Temple history

News Order

0

Ticker

0 
காஞ்சி கைலாசநாதர் கோவில்

காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு ஒரு டூப்ளிகேட் கோவிலா…!?

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. 1300 ஆண்டுகளுக்கு முன் ராஜசிம்மன் என்கிற பல்லவ ராஜ சிற்பியால் கட்டப்பட்ட இந்தக் கோவில் முழுவதும் கல்லால் ...


விநாயகர்

வெள்ளைக்கார விநாயகரைத் தெரியுமா உங்களுக்கு?

பாண்டிச்சேரி என்கிற புதுச்சேரியின் பழய பெயர் வேதபுரி.இது அத்தனை பழமையான ஊர் அல்ல,ஆனால் புதுச்சேரிக்கு வடக்கில் உள்ள எயிற்பட்டினம் என்கிற மரக்காணமும்,தெற்கில் உள்ள அரிக்க மேடும் மிக...


மங்கலதேவி கண்ணகி கோவில்

1800 ஆண்டு பழமையான கண்ணகி கோவில் திருவிழா! வருகிற சித்திரை 19-ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாள் அன்று மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது.


திருநல்லூர் பெருமணம்

பாடல் பெற்ற தலங்கள் வரிசை-5 : திருநல்லூர் பெருமணம்

இந்தத் தலத்தில் தான்,திருமால் இறைவனை வணங்கி அவுணர்களை வெல்ல வரம் பெற்றார். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் போது கொள்ளிடம் பாலம் வரும்.பாலம் கடந்தால் கொள்ளிடம் ஊர் வரும் அங்...


சிவபுரி

சிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில் 

இந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் வழியே வழிந்து வரும் பால் அருந்தினால் நோய்கள் குணமாகும் என்பது  நம்பிக்கை.


spiritual

பாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்

திருநெல்வாயில் அரத்துறை.இந்தப்பழம் பெயர் இப்போது மாறிவிட்டது. இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள இந்த ஊரின் பெயர் திருவட்டத்துறை ஆகிவிட்டது. விருத்தாசலம் தொழுதூர் சா...

2018 TopTamilNews. All rights reserved.