அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ட்ரோன் பயன்படுத்த தயாராகும் ஸ்பைஸ்ஜெட்

 

அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ட்ரோன் பயன்படுத்த தயாராகும் ஸ்பைஸ்ஜெட்

மும்பை: அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ட்ரோன் பயன்படுத்த ஏற்பாடுகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செய்து வருகிறது.

விமான பயண டிக்கெட்களை பட்ஜெட் விலையில் விற்று விமான சேவையை தொடர்ந்து கடைபிடித்து வரும் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் ஆகும். இந்நிறுவனம் சரக்குகளை கையாள ஸ்பைஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் துணை நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக நாட்டில் எல்லா விநியோக சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பொருட்கள் மற்றும் இ-காமர்ஸ் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்க ஸ்பைஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக ட்ரோன்களை சோதனை செய்வதற்கான அனுமதியை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெற்றுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) சோதனை அடிப்படையில் ட்ரோன்களை இயக்க 13 குழுக்களுக்கு விலக்கு அளித்தது. குறைந்த செலவில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரக்கு விநியோகத்திற்காக சோதனை செய்வது இந்தியாவில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விமான போக்குவரத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறியுள்ளார்.