பறப்பதற்கு தடை போட்ட லாக்டவுன்… ரூ.600 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸ்பைஸ்ஜெட்..

பறப்பதற்கு தடை போட்ட லாக்டவுன்… ரூ.600 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸ்பைஸ்ஜெட்..

2020 ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.600.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

விமான சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.600.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.262.80 கோடி ஈட்டியிருந்தது.

பறப்பதற்கு தடை போட்ட லாக்டவுன்… ரூ.600 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸ்பைஸ்ஜெட்..
ஸ்பைஸ் ஜெட்

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமல்படுத்திய லாக்டவுன் காரணமாக அந்த காலாண்டில் பெரும்பான்மையான நாட்கள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வருவாய் கடுமையாக பாதித்தது. இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பறப்பதற்கு தடை போட்ட லாக்டவுன்… ரூ.600 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸ்பைஸ்ஜெட்..
அஜய் சிங்

2020 ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் 82.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.521 கோடியாக குறைந்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான அஜய் சிங் கூறுகையில், விமான போக்குவரத்து துறையை தாக்கும் மிக மோசமான நெருக்கடி இதுவாகும் ஆனால் ஸ்பைஸ் ஜெட் தொடர்ந்து புதுமையான உருவாக்குவதில் மற்றும் துறையில் சிறப்பாக செயல்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.