தாம்பரம் – நாகர்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 

தாம்பரம் – நாகர்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் இடையே டிச.16ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வாரத்திற்கு 3 முறை அதாவது ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை டிச.16ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ரயில்கள் இயக்க நாட்களில் இரவு 7.25க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7.30க்கு நாகர்கோவிலை அடையும். பின்னர் அங்கிருந்து மாலை 4.15க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.14க்கு தாம்பரம் வந்தடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம்பரம் – நாகர்கோவில் இடையே வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டது. அந்த வகையில், பயணிகளின் தேவைக்கேற்ப அவ்வப்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.