தமிழகத்தில் செப்.15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே

 

தமிழகத்தில் செப்.15 வரை  சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே

தமிழகத்தில் செப். 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது செப்டம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மின்சார ரயில்கள், அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் செப்.15 வரை  சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே

இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் திருச்சி – செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி – செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை – விழுப்புரம், கோவை – காட்பாடி, அரக்கோணம் – கோவை, திருச்சி – நாகர்கோவில், கோவை – மயிலாடுதுறை ஆகிய தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.