ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்!

 

ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்!

கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. நாடு முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 600 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன் அடைந்திருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணிகள் அனைவருக்கும் விலையில்லா உணவு, குடிநீர் வழங்கப்பட்டதாகவும், தனிநபர் இடைவெளியுடன் நோய் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்!

இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.