செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்!

 

செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ரயில் சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர், பல சேவைகளுக்கு அனுமதி அளித்ததன் படி ரயில்சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்றும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்!

இந்நிலையில் வரும் 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது.

செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில்!

இதேபோல் அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 ஆம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.