தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து!

 

தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ரயில்களில் அதிகமாக பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே  3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து!

இந்நிலையில் தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் ஜூலை 15வரை ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 7 ரயில்களின் சேவையை ரத்து செய்வதாக ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு இரயில்கள் 29-6-2020 முதல் 15-7-2020 வரை ரத்து செய்ய படுவதாகவும், இந்த ரயிலில் முன் பதிவு செய்தோர்க்கு முழு பணம் திரும்ப தரப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோமேட்டிக் ஆக பணம் refund செய்யபடும் என தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், டாக்டர். எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லிக்கு இடையே இயக்கப்படும் raajdhaani சிறப்பு ரயில் (T.no:02243/02244) அட்டவணை படி இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.