ஜெ. நினைவிடத்திற்கு தொண்டர்களை அழைத்து செல்ல தனி ரயிலை பதிவு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

ஜெ. நினைவிடத்திற்கு தொண்டர்களை அழைத்து செல்ல தனி ரயிலை பதிவு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் சென்னைக்கு படையெடுத்துள்ளனர்.

ஜெ. நினைவிடத்திற்கு தொண்டர்களை அழைத்து செல்ல தனி ரயிலை பதிவு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு மதுரையிலிருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை சென்னைக்கு அழைத்து செல்ல தனி ரயில் ஒன்றை அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவு செய்தார். இந்த ரயிலானது இன்று இரவு 7மணிக்கு மேல் புறப்பட்டு நேராக சென்னைக்கு சென்று விழாவில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் நாளை மாலை 5 மணிக்கு அதே ரயில் மூலமாக திருப்பி மதுரைக்கு தொண்டர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்த ரயிலில் தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூவும் சேர்ந்து பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா சார்பில் 30பேருந்துகள் மற்றும் 70வேன்களில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்துசெல்கின்றார்.