நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு!

 

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் அளவிற்கு பொருளாதார வசதிகள் மாணவர்களுக்கு இல்லை என்பதாலும் அவசர சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு!

பொருளாதார நிலை, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உள் ஒதுக்கீட்டை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.