Home மாவட்டங்கள் திருச்சிராப்பள்ளி சமயபுரத்தில் நாளை சிறப்பு பூஜை மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து

சமயபுரத்தில் நாளை சிறப்பு பூஜை மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை மஹாளய அமாவாசை நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக  இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.


    
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலமாகும். அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடஙகு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுபாடுகளுடன் செப்டம்பர் 1 ந்தேதி வழிப்பாட்டு தலங்களை திறக்க தபிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் நாளை மஹாளய அமாவாசை தினத்தில் வருகை புரியும் பக்தர்களுக்கு  வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்க கோயில் நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன்படி 
மஹாளய அமாவாசையன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது.
 முடிகாணிக்கை மற்றும் தரிசனம் நேரம் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


 
கோயில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதியில்லை.  அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
100 சதுர மீட்டர் அல்லது 1075  சதுர அடிக்கு 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


 
65 வயதிற்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம்,சுவாச கோளாறு, இதயகோளாறு, சர்கரைநோய்  மற்றும் கர்ப்பினி பெண்கள் 10 வயதிற்கு உட்டபட்ட குழந்தைகள் தரிசனம் செய்ய வருபை புரிவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
கோயிலுக்குள் தேங்காய், பூ, பழம் கொண்டு செல்ல அனுமதியில்லை. கோயில் சார்ந்த இடங்களில்  எச்சில் உமிழ்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.  நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 
இந்த வழிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என கோயில் இனை ஆணையர் அசோக்குமார்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

நவம்பர் 6 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டம்!

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள். அரசு...

சூர்யாவின் 40 ஆவது பட அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியானது!

சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் விரைவில்...

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது....
Do NOT follow this link or you will be banned from the site!