பக்ரீத் பண்டிகை – ஈரோட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

 

பக்ரீத் பண்டிகை – ஈரோட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

ஈரோடு

பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவர். ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

பக்ரீத் பண்டிகை – ஈரோட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

இதனால், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து தொழுகையில் ஈடுபட்டனர். கோபிச்செட்டிப்பாளையம் பகுதிக்குட்பட்ட கடத்தூர், நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 18 பள்ளிவாசல்களில் நேற்று காலை 8 மணிக்கு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல், சத்தியமங்கலத்தில் நேற்று காலை பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், வண்டிப்பேட்டை, பாத்திமா நகர், நேரு நகர் உள்ளிட்ட 8 பள்ளிவாசல்களிலும் இந்த சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் அந்தியூர், பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, சித்தோடு, கவுந்தப்பாடி, புஞ்சை புளியம்பட்டி உள்பட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும், பக்ரீத் பண்டிகையை ஒட்டி குர்பானி வழங்கப்பட்டது.