• February
    25
    Tuesday

Main Area

Main



குளிர்காலத்திற்கு ஏற்ற சுவையான முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி.!?

Radish Paratha
Radish Paratha

பரோட்டா என்றால் எல்லாருக்குமே ரொம்ப புடிக்கும் அதுவும் சூடான சால்னா, சிக்கன் கிரேவியிடன் சாப்பிடுவதற்கு அட்டகாசமா இருக்கும் என்று சொல்லும்போதே  சாப்பிடனும் போல  இருக்கா !  இதெல்லாம் நீங்க வழக்கமா சாப்பிடுகிற ஐட்டம் தான் எப்பவாவது முள்ளங்கி பரோட்டா சாப்பிட்டு இருக்கீங்களா..!? என்னது முள்ளங்கி பரோட்டாவை என்று ஆச்சர்யப்படுறது தெரியுது… நீங்களே செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க. செம டேஸ்ட்டா இருக்கும். 
குறிப்பாக முள்ளங்கி படுத்த குளிர்காலத்திற்கு மிகவும் நல்லது. 

radish

முள்ளங்கியை நாம் சாம்பாரில் போட்டு பாத்திருப்போம். ஆனால் வட இந்தியாக்களில் முள்ளங்கியை பச்சயாகவும்,ஊறுகாயாகவும் செய்து சாப்பிடுகிறார்கள். காரணம், நம்மைவிட   அவர்களுக்கு முள்ளங்கியின் நன்மைகளை நல்லாவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  முள்ளங்கியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடல் சேரும் பிரீ ராடிகல்சை எதிர்த்து போராட உதவும். 

சருமத்திற்கு முள்ளங்கி மிகவும் நல்லது, அதிலிருக்கும் சத்துக்கள் சருமத்திற்கு கொல்லாஜெனை தருவதால் உடல் அழகாக இருக்கும்.இதில் அதிகளவு பாஸ்போரஸ் மற்றும் ஜிங்க் இருப்பதால் உங்களுக்கு சரும வறட்சி, கலையிழந்த சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.மேலும் முள்ளங்கி குளிர்காலத்தில் சாப்பிட்டால் மிகுந்த நன்மைகளை உண்டாக்கும் குறிப்பாக முள்ளங்கி ஆன்டி-கன்ஜெஸ்டிவ் ப்ராபர்ட்டி கொண்டுள்ளதால் அது ஸ்வாச குழாய், தொண்டையில் சேர்ந்திருக்கும் சளியை நீக்கும். மேலும் முள்ளங்கியில் வைட்டமின்கள் A,C,E,B6 ஆகியவைகளுடன் பொட்டாசியம், மற்றும் இதர மினெரல்ஸ் அடங்கியுள்ளதால் முள்ளங்கி எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டுள்ளது.குளிக்காலத்தில் சருமமும், உடலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படும் இதனை முழங்கி சாப்பிடுவதால் சரிசெய்துகொண்டு உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கலாம். மேலும் முள்ளங்கி நார்சத்து அதிகம் கொண்டுள்ளதால் மலச்சிக்கலை நீக்கவல்லது. 

Mooli paratha

முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படியென்று பார்ப்போம்.

செய்ய தேவையான பொருட்கள்:

1.கோதுமைமாவு -1.5 கப் 
2.முள்ளங்கி - 1 பெரியது 
3.கொத்தமல்லி - 2 டீஸ் ஸ்பூன் நறுக்கியது 
4.ஓமம் - 1/8 டீஸ் ஸ்பூன் 
5.கொத்தமல்லி தூள் - 1/4 டீஸ் ஸ்பூன் 
6.கரம் மசாலா - 1/8 டீஸ் ஸ்பூன் 
7.பச்சை மிளகாய் - 1 நறுக்கியது 
8.தண்ணீர் - தேவையான அளவு 
9.எண்ணெய் - தேவையான அளவு 
10.உப்பு - தேவையான அளவு 


செய்முறை:

1. ஒரு பௌலில் மாவை சேர்த்து அதில் ஒரு டீஸ் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்து தண்ணீர் சேர்த்துவர வேண்டும் நல்ல மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து பிறகு அதை வேறு கன்டைனருக்கு மாற்றி மாவின் மேல்  எண்ணெய் தடவி 15-20 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவேண்டும். 

2.இப்போது முள்ளங்கியை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் தோலினை சீவி,முள்ளங்கியை துருவி வைத்து அதில் 1/4 இருந்து 1/2 டீஸ் ஸ்பூன் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

3.இப்போது 15 நிமிடங்களுக்கு பிறகு உப்பு சேர்க்கப்பட்ட முள்ளங்கியில் அதிகளவு தண்ணீர் சுரந்துள்ளதை காண்பீர்கள் அந்த நீரினை அகற்றி முள்ளங்கியை நன்கு பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

4.இப்போது பிழிந்து எடுத்து வைத்துள்ள முள்ளங்கியில் நறுக்கிய கொத்தமல்லி, ஓமம், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவேண்டும். இதில் மீண்டும் உப்பு சேர்க்கவேண்டியதில்லை.முள்ளங்கி ஸ்டப் ரெடி.

5.இப்போது மாவினை எடுத்து அதை நன்கு உருட்டி உருண்டைகளாக எடுத்து அதன் நடுவே செய்துவைத்த முள்ளங்கி ஸ்டப் வைக்க வேண்டும்.

6.இப்போது மாவினை நன்கு ரோல் செய்து கொள்ளவேண்டும் ஒட்டாதவாறு சிறிது கோதுமை மாவினை  தெளித்து கொள்ளவேண்டும்.

7.இப்போது ஸ்டவ்வில் தவா வைத்து சூடானதும் 1,2 சொட்டுகள் எண்ணெய் ஊற்றி பரோட்டாவை போடவேண்டும், சிறிய பிரவுன் டாட்ஸ் வந்ததும் மீண்டும் திருப்பி போடவேண்டும் இல்லையென்றால் ஒருபக்கம் வெந்தால்கூட எடுத்து வைத்து கொள்ளலாம்.

சூடான முள்ளங்கி பரோட்டா ரெடி இதனை ஊறுகாயுடனும் சாப்பிடலாம். குளிர்காலத்தில் உடலுக்கும் நாவிற்கு ருசியான முள்ளங்கி பரோட்டா செர்வ் செய்வதற்கு ரெடி,நீங்களும் செய்து சாப்பிட்டு என்ஜோய் பண்ணுங்க!

2018 TopTamilNews. All rights reserved.