ஆஸ்திரேலியா , இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை – சரிதானா? #IPL

 

ஆஸ்திரேலியா , இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை – சரிதானா? #IPL

இன்னும் 24 மணி நேரத்தில் ஐபிஎல் திருவிழா தொடங்க விருக்கிறது. ரசிகர்கள் ஆவலோடு தங்களின் விருப்பமான வீரர்களின் ஆட்டத்தை ரசிக்கக் காத்திருக்கிறார்கள்.

பிசிசிஐ நிர்வாகம் கொரோனா பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை இருமுறை செய்யப்பட்ட ஆறு நாட்கள் தனிமைப்படுவார்கள். இது ஐபிஎல் விதிகளில் ஒன்று.

ஆஸ்திரேலியா , இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை – சரிதானா? #IPL

இந்த விதியை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது. ஏனெனில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்காக ஒருநாள் டி20 போட்டிகளின் தொடர் நேற்று முதன்நாள்தான் முடிவடைந்தது.

டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் தொடரை வென்றது. அந்தச் சுற்றுப்பயணம் முடிந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள ஐக்கிய அமீரகம் வந்திருக்கிறார்கள். அவர்களோடு கரீபியன் பிரிமியர் லீக்கில் ஆடிய இம்ரான் தாஹிர், பிராவோ உள்ளிட்ட வீரர்கள் ஐக்கிய அமீரகம் வந்தடைந்தனர்.

ஆஸ்திரேலியா , இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை – சரிதானா? #IPL

தற்போது ஐக்கிய அமீரகத்திற்கு வந்திருக்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் ஆனால், 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக 36 மணிநேரம் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் இத்தனை வீரர்கள் ஒன்றுகூடும் போட்டி நடத்துவதே அதிக ரிஸ்க் உள்ளது. அதனால்தான் கொரோனா பரிசோதனைகளை முறையாகக் கடைபிடிக்க அனைத்து அணிகளிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு விதிகளை சில வீரர்களுக்காக மாற்றுவது சரிதானா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

ஆஸ்திரேலியா , இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை – சரிதானா? #IPL

ஏனெனில், ஆகஸ்ட் 15 முதலே பல வீரர்கள் குடும்பத்தைப் பிரிந்து ஐபிஎல் போட்டியில் ஆட தயாராகி வருகிறார்கள். அவர்களின் உடல்நிலைக்கு புதிதாக வரும் வீரர்களிடம் காட்டும் சிறப்புச் சலுகையால் நோய்த் தொற்று வர வாய்ப்பியிருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

எது எப்படியோ பாதுகாப்பாக விளையாட்டுத் தொடரை மேற்கொள்வதே சரியான வழிமுறையாக இருக்கும் என்பதே பலரின் நிலைபாடாக இருக்கிறது.