ஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை

 

ஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை

உளுந்து அபரிமிதமான இரும்பு சத்து கொண்டது. உடல் உழைப்பு அதிகம் உள் ள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், குழந்தைகள் போன்றோர் வாரத்தில் மூன்று முறை உளுந்தங் களியை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உளுந்தங் களியை அவ்வப்போது சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு பாதிப்பு கடுமையாகாமல் காக்கிறது.
உடல் மிகவும் மெலிந்தவர்கள் உளுந்தங் களியை அவசியம் சாப்பிட வேண்டும்.போதை வஸ்துக்களை அதிகம் உபயோகிப்பதாலும், வெப்பமான சூழல்களில் அதிகம் இருப்பதாலும் சில ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு, மலட்டு தன்மை ஏற்படுகிறது. உளுந்தங் களி இத்தகைய பாதிப்பை கொண்ட ஆண்களுக்கு சிறந்த இயற்கை உணவாகும். உளுந்தங் களியை வாரம் நான்கு முறை சாப்பிடுவது ஆண்களின் மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடுகளை நீக்கும்.

ஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை


கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உளுந்தங்களி ஆகும்..மாதவிடாய் நாட்களில் ஏற்படும் கால் வலி, இடுப்பு வலி, உளுந்தங் களி சேர்த்துக்கொள்வதன் மூலம் குறையும்..
உளுந்து களி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மிக கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. வாரமொருமுறை உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். உளுந்து களி சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் பொட்டாசியம் சத்து, உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கி, நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைகிறது.

ஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை

உளுந்தங்களி தயார்செய்ய தேவையான பொருட்கள்:-

கருப்பட்டி – 250 கிராம்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 500 கிராம்
பச்சரிசி – 400 கிராம்
உளுந்தங்களி மாவு செய்முறை:-
உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த உளுந்தையும் பச்சரிசியையும் நன்கு கலந்துகொள்ளவும், இதை நன்றாக அரைத்து கொள்ளவும் (ரைஸ் மில்லில் அரைத்தால் நன்கு அரைபடும்). மாவு வழுவழுப்பாக இருக்க வேண்டும்.
கருப்பட்டியை சிறு துண்டாக உடைத்து கொள்ளவும். ஒரு கப் மாவிற்கு 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

ஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை

அளந்து வைத்துள்ள தண்ணீரை ஒருகடாயில் ஊற்றி அதில் கருப்பட்டியை போட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரை ஊற்றி, அதில் கொதி வந்த பிறகு 1 கரண்டி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, தண்ணீயாக கரைக்கவும், அதை கருப்பட்டிபாகுவில் ஊற்றி கிண்டவும். அத்துடன் உளுந்தங்களி மாவை சிறிது சிறிதாக கொட்டிக் கிண்டவும், நன்றாக அடிவரை கிண்டவேண்டும்.
8 முதல் 10 நிமிடத்தில் உளுந்தங்களி வெந்துவிடும், கையில் தண்ணீர் தொட்டு, களியை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.

ஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை


கையில் ஒட்டினால் இன்னும் சற்றுநேரம் வேக வைக்க வேண்டும்.
மாவை போடும் பொழுது மிதமான வெப்பநிலையில் தான் வைத்து கிண்ட வேண்டும். களி வெந்தப்பிறகு ஒரு குழி கிண்ணத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்தங்களியை போட்டு கிண்ணத்தை கையால் சுற்றினால் உருண்டையாக வரும். சிறிய சிறிய உருண்டையாக செய்து வைக்கவும், இந்த உருண்டையை களி சூடான நிலையிலேயே செய்ய வேண்டம். உளுந்தங்களி ரெடியாகி விட்டது.
குறிப்புகள்:
உளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும்.
எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.
உருண்டைகளாக உருட்டியோ அல்லது அப்படியேவும் கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.