“என்னையே கட்சிய விட்டு தூக்குறீங்களா?” – ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ கோர்ட்டுக்கு இழுத்த புகழேந்தி!

“என்னையே கட்சிய விட்டு தூக்குறீங்களா?” – ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ கோர்ட்டுக்கு இழுத்த புகழேந்தி!

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்தார். அதேபோல ஓபிஎஸ் குறித்தும் நக்கலடித்து பேசியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என்றார்.

“என்னையே கட்சிய விட்டு தூக்குறீங்களா?” – ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ கோர்ட்டுக்கு இழுத்த புகழேந்தி!

அவர் பேட்டி கொடுத்த மறுநாள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் புகழேந்தி நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கடந்த ஜூன் மாதம் அறிவித்தனர். அதில், கட்சி விரோத செயல்களில் ஈடுட்டதால் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து தனது பெயருக்குக் கலங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகவும் கூறி எம்பி,எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

“என்னையே கட்சிய விட்டு தூக்குறீங்களா?” – ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ கோர்ட்டுக்கு இழுத்த புகழேந்தி!

ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அலிசியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்ட முதல் நபராக எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது நபராக ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி , ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.