காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம்

 

காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம்

தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம்

திருவள்ளூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் காணாமல் போனதாக புகார் கொடுத்து கண்டிபிடிக்காத 91 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஆந்திராவின் சித்தூர், நகரி போன்ற பகுதிகளிலும் விபத்து, வயது முதிர்வு காரணமாக இறந்தவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் புகைப்படங்கள் திரையிடப்பட்டது. அதில் பொன்னேரி பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாயமான கன்னியப்பன் (76) மற்றும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள் ஆகியோரது புகைப்படங்கள் ஒத்துபோன நிலையில், இதுகுறித்து மேலும் உறுதிசெய்ய எஸ்.பி அரவிந்தன் உத்தரவிட்டார்.

காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம்

இதேபோன்று ஈரோடு மாவட்டம் திண்டல் வெள்ளாளர் கல்லூரியில் நடைபெற் முகாமில் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி கலந்துகொண்டார். அப்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் காணாமல் போனதாக புகார் அளித்த 257 பேரின் உறவினர்களை வரவழைத்து, மாநிலம் முழுவதும் விபத்துக்களில் இறந்தவர்கள், காப்பகங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில், ஒரு சிலரின் அடையாளங்கள் ஈரோடு மாவட்டத்தில் மாயமானவர்களுடன் பொருந்தி இருந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் விசாரித்து உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.