பொதுத் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

பொதுத் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 ஆம் கட்ட ஊரடங்கு புதிய தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று தமிழகத்தின் பேருந்து சேவைகள் துவங்கியது. குறிப்பாக தமிழகம் மொத்தம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த 8 மண்டலங்களுக்கு உள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மண்டலத்தில் இருந்து பேருந்து இன்னொரு மண்டலத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பொதுத் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 15 முதல் தொடங்க உள்ள பொதுத் தேர்வில் தேர்வெழுத உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தேர்வெழுதும் இடத்திற்கு அழைத்து செல்ல 49 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே இயக்கப்படும் இந்த பேருந்துகளின் மூலம் 72 பள்ளிகளை சேர்ந்த 800 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைவார்கள் என்று மாற்றுத்திறனாளி நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு அறிவிப்பும் உள்ளே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.