நல்ஆளுமைக்கான விருதை பெற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

 

நல்ஆளுமைக்கான விருதை பெற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டையில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். முதல்வரிடம் நல்ஆளுமை விருதை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பெற்றார். அத்துடன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 26 பேருக்கு சிறப்பு பதக்கம் வழங்கினார் முதல்வர் பழனிசாமி .

நல்ஆளுமைக்கான விருதை பெற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

  • மதுரை அருண்குமார் கடலூர் ராம்குமார், சென்னை அம்பேத்கருக்கு மாநில இளைஞர் விருது தரப்பட்டது.
  • ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமாருக்கு அப்துல் கலாம் விருது தரப்பட்டது.
  • கொரோனா தொற்றின் சங்கிலித் தொடரை உடைத்த சென்னை மாநகராட்சிக்கு நல்ஆளுமை விருது
  • வேளாண் தோட்டக்கலை வேளாண் பொறியியல் துறைக்கு நல்ஆளுமை விருது
  • மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருதை பெற்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்
  • மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு covid-19 சிறப்பு விருது. கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
  • தமிழக கருவூல கணக்குத்துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது – நிதி, கருவூலம் பணிகளை கணினி மயமாக்கியதற்காக விருது.

நல்ஆளுமைக்கான விருதை பெற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

  • துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை மூன்று பெண்கள் பெற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருது.
  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருது பெற்றனர். சென்னையை சேர்ந்த சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளிக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது
  • சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது
  • அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது
  • உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது
  • சிறந்த பேரூராட்சி முதல் பரிசு சேலம் -வனவாசி, இரண்டாம் பரிசு தேனி -வீரபாண்டி, மூன்றாம் பரிசு கோவை- மதுக்கரை