Home சிறப்பு கட்டுரை மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்... பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

மாறி வரும் வரதட்சணை சம்பிரதாயம்… பெண்களைப் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

“விண்ணை நோக்கி எகிறிக் கொண்டு போகும் தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”, என்று நினைக்கும் பெற்றோர்களே, கவலைப்படாதீர்கள். இதேபோல் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது? என்று கலங்கும் புதுமணத் தம்பதிகளும் கவலை கொள்ளற்க…!
உங்களுக்குத் தெரியுமா? நமது தாத்தா, பாட்டி காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்துதான் மாப்பிள்ளை வீட்டார் திருமணங்களை நடத்தினர். காலப்போக்கில் எப்படியோ மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளைகளுக்கு நகை, நட்டு, ரொக்கம் தரும் சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது காலம் மெது,மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் காவல்துறை குற்றப் பதிவேடுகளில் வரதட்சணைக் கொடுமைகள் வெகுவாக குறைந்து விட்டன. சற்றே சமூகத்தை உற்றுப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் முன்பு போல் மாப்பிள்ளை வீட்டார் அதிக அளவு வரதட்சணைகளை எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் அது.

பெரும்பாலான திருமணங்கள் “போட நினைப்பதை போடுங்கள்’” என்ற ஒரு வரிக் கோரிக்கையிலேயே நடந்து முடிகின்றன. இதற்கு காரணங்கள் இருக்கிறது. பெண்கள் முன்பைப் போல் இல்லை. அவர்களும் ஆண்களுக்கு நிகராக பி.ஈ., எம்.பி.ஏ.,எம்.பி.பி.எஸ் என உயர் படிப்பு படிக்க ஆரம்பிக்க விட்டார்கள். அவர்களும் வேலைக்கு போகிறார்கள். கை நிறைய சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.


ஆண்களை பொறுத்தமட்டில் இன்றைய இளைய தலை முறையினர் அதிக வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. இன்னும் இது பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் பழைய காலத்து பெற்றோர்கள்தான். இளைய தலை முறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்றைய இளைய தலை முறை ஆண்களும். பெண்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.


இது தவிர தமிழகத்தை பொறுத்தவரையில் ஆண்பால், பெண்பால் பிறப்பு விகிதாச்சார மாற்றமும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்..
இதன்படி ஆயிரம் ஆண்களுக்கு ராமநாத புரத்தில் 977, மதுரை – 990, நாமக்கல் – 986, சேலம் – 954, விழுப்புரம் – 985, தேனி – 990,திண்டுக்கல் – 998, திருப்பூர் – 988, ஈரோடு – 992, தர்மபுரி – 946, கிருஷ்ணகிரி – 956, திருவள்ளூர் – 983, திருவண்ணாமலை – 993, சென்னை – 986 எனப் பெண்களை கணக்கிடலாம்.
பெண்கள் விகிதம் அதிகரித்திருக்கும் மாவட்டங்களையும் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதுவும் மிக சொற்ப அளவு வித்தியாசம்தான்.
அந்த வகையில் நீலகிரி – 1041,தஞ்சாவூர் – 1031, நாகப்பட்டினம் – 1025, நெல்லை மற்றும் தூத்துக்குடி – 1024, திருவாரூர் – 1020, அரியலூர் – 1016, புதுக்கோட்டை – 1015, திருச்சி – 1013, கன்னியாகுமரி – 1010, விருதுநகர் – 1009, பெரம்பலூர் – 1006 வேலூர் – 1004 எனவும், ஏனைய மாவட்டங்கள் சரி சமமாகவும் உள்ளன,


இத்தகைய ஆண்- பெண் பிறப்பு விகித வேறுபாடு தவிர இன்றைய காலத்துப் பெண்கள் துணிச்சலாகப் புறப்பட்டு நகரத்தை நோக்கி படை எடுப்பதும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படித்த கிராமத்து பட்டதாரிப் பெண்கள் இப்போது சென்னை, பெங்களூர். டெல்லி என முக்கிய நகரங்களுக்கு பணியாற்ற கிளம்பி இருப்பதும் ஒரு காரணமாகும். முன்பெல்லாம், திருமணங்கள் சொந்த பந்தத்திற்குள் அதிகம் நடந்தன. திருமணம் என்பது சொந்தக்காரர்களின் மிகப் பெரிய கவுரவ பிரச்னையாக இருந்தது. இதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் முறை மாப்பிள்ளை என்று ஒருவர் இருப்பார். அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும்.

இப்போது அப்படி இல்லை. மணமக்களை தேடுவது பரந்து விரிந்த விசயமாகி விட்டது. நிறையத் திருமணங்கள் இணயதள தேடுதல் வழியாக நடக்கத் தொடங்கி விட்டன. பெண் படித்து வேலைக்கு போனால் போதும் வரதட்சணை ஒரு பொருட்டல்ல என்ற நியதிக்கு மனணமகன் வீட்டார் வந்து விட்டார்கள்.இதுவல்லாமல் திருமணத்தை அதிக செலவில்லாமலும், அதிக கூட்டமில்லாமலும் நடத்தும்படியாக “கொரோனா” ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறது.
இதன் எதிரொலியாக வருகிற 2025 க்கு பிறகு நடை பெறும் திருமணங்களில் வரதட்சணை என்ற பேச்சுக்கு இடமே இருக்காது. மணமகன் வீட்டார்தான் மணமகளுக்கு பணம் கொடுத்து பெண்ணை பெற வேண்டியது இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

-செங்கை ‘போஸ்’

மாவட்ட செய்திகள்

Most Popular

பாஜகவில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில்? கி.வீரமணி

கொலைகாரர்களையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான்! எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும் என்கிறார் திராவிட...

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை : வெளியானது சிசிடிவி காட்சிகள்!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25,091 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்...

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் அடி வாங்கிய வர்த்தகம்… சென்செக்ஸ் 746 புள்ளிகள் வீழ்ச்சி

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ. லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. சில நிதி நிறுவனங்கள்...

6 நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியா இன்றளவும் உலக அளவில் அதிக அளவில் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையை பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!